நம்பியூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
- நம்பியூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
- அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை ஆய்வு மேற்கொ ண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் நம்பியூர் பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வே று வளர்ச்சி திட்டப்பணிக ளை கலெக்டர் ராஜ கோபா ல் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நம்பியூர் பேரூராட்சிக்கு ட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்பு ற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நம்பியூர் வார சந்தை வளாகத்தில் ரூ.460.63 இல ட்சம் மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி, குருமந்தூர் அரசு மேல்நிலை ப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில் பே வர் பிளாக் அமைக்கும் பணி, நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சனூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பா ட்டு திட்டத்தின் கீழ் ரூ.56.83 இலட்சம் மதிப்பீட்டில் இருகலூர் முதல் சுண்ணா ம்புகரையூர் வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி, பூசாரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் சமத்து வபுரம் திட்டத்தின் கீழ் ரூ.29.44 இலட்சம் மதிப்பீ ட்டில் வீடுகள் சீர் செய்யும் பணி, ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டில் 6 எண்ணிக்கை யிலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.620.40 இலட்சம் மதிப்பீ ட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெ க்டர் நேரில் சென்று பா ர்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.
முன்னதாக நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை ஆய்வு மேற்கொ ண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் மொட்டணம் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு ரூ.30 ஆயிரம் மானிய உதவியுடன், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் கறவை மாடு வாங்குதல் உள்ளிட்ட வேளாண் உபக ரணங்களும் வேட்டை யம்பாளையம் மற்றும் எழத்தூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் மானிய உதவியுடன் தார்ப்பாய் மற்றும் பேட்டரியால் இய ங்கும் தெளிப்பான் ஆகியவ ற்றையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் நடரா ஜன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், சுபா, நம்பியூர் வட்டாட்சியர் மாலதி உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.