உள்ளூர் செய்திகள்
வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
- வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கு விற்பனையானது
சென்னிமலை,
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 23 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2,176 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 51 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனையானது.