உள்ளூர் செய்திகள்
வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
- வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- சராசரி விலையாக கிலோ 21 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,700 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 70 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 85 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 833 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 18 ஆயிரத்து 218 ரூபாய்க்கு விற்பனையானது.