உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு
- அனுமதியின்றி மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டன
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதியில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெள்ளி திருப்பூர், தாளவாடி, பவானி சாகர் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த வைரபாளை யம் பட்டேல் தெருவை சே ர்ந்த முத்துசாமி மகன் சாமி நாதன் (வயது 53), திகினாரை அம்பேத்கர் தெரு மன்ஞ்சை யா மகன் மணி (34), பவானி சாகர் அண்ணா நகர் குப்புசா மி மகன் முருகேசன், அந்தியூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் அல்லிமுத்து (58)ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.