உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2023-09-04 14:12 IST   |   Update On 2023-09-04 14:12:00 IST
  • வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்
  • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி கோவில் புதூரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 39). இவரது மகன் கிஷோர் (15). இந்நிலையில் சம்பவத்தன்று கிஷோர் வெளியே செல்வதாக கூறிவிட்டு குப்பன் துறை எல்.பி.பி. வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார். அப்பொழுது அவர் ஆழமான பகுதியில் பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். பின்னர் தகவல் அறிந்த அவரது தந்தை குமாரசாமி உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிஷோரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து குமாரசாமி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News