உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2023-09-20 09:51 GMT   |   Update On 2023-09-20 09:51 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
  • அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.12 அடியாக உள்ளது.

நேற்று அணைக்கு வினாடி 4,487 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று 711 கனஅடி வீதமாக குறைந்து வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.77 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.95 அடியா கவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News