உள்ளூர் செய்திகள்

ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்துக்கு விளைபொருட்கள் ஏலம்

Published On 2023-09-23 15:20 IST   |   Update On 2023-09-23 15:20:00 IST
  • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
  • மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.

சிவகிரி:

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 76 கிலோ எடையு ள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.108.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.182.99 காசுகள், சராசரி விலையாக ரூ.143.22 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 009-க் விற்பனையானது.

இதேபோல அவல்பூ ந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 104 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 221 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

விற்பனை தேங்காய் பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.65 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.5 காசுகள், சராசரி விலையாக ரூ.76.55 காசுகள் என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.52.90 காசுகள்,

அதிகபட்ச விலையாக ரூ.71.35 காசுகள், சராசரி விலையாக ரூ.67.65 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 473-க்கு விற்பனையானது.

மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.

Tags:    

Similar News