உள்ளூர் செய்திகள்

போலீஸ் ஜீப் சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி விபத்து

Published On 2023-01-28 14:59 IST   |   Update On 2023-01-28 14:59:00 IST
  • கட்டுப்பாட்டினை இழந்த ஜீப் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதி நின்றது.
  • இதில் ஜீப்பின் வலதுபுறம் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முருகைய்யா.

நேற்று இரவு ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்காக போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.

மேட்டூர் சாலை முனிசிபல்காலனி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது குறுக்கே மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் வந்ததால் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஜீப்பை திருப்பி உள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டினை இழந்த ஜீப் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதி நின்றது. இதில் ஜீப்பின் வலதுபுறம் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து கிரேன் கொண்டு வரப்பட்டு ஜீப் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News