உள்ளூர் செய்திகள்

காட்டு யானைகள் ஊருக்குள் புகாதவாறு அகழி அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-08-26 09:45 GMT   |   Update On 2023-08-26 09:45 GMT
  • 2 காட்டு யானைகள் தென்னை மரத்தை சேதம் செய்தது.
  • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட அருள்வாடி பகுதியை சேர்ந்த பங்கஜப்பா விவசாயி 2 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தை சேதம் செய்தது. அருகில் இருந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை இரவு 12 மணியளவில் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.

3 மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானையை வனப்பகுதியில் விரட்டினார்கள். யானையால் 20 தென்னை மரம் சேதம் ஆனாது.

இதனால் அபபகுதி விவசா யிகள் அச்சமடைந்த னர். யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வணப்பகுதி சுற்றி அகழி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News