பவானிசாகர் அருகே மின் கசிவால் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
- பவானிசாகர் அருகே மின் கசிவால் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது
- தனக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டு ம் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்த ம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியைச் சே ர்ந்தவர் சக்திவேல் (வயது 47). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று மாலை இவரது தோட்ட த்தில் அருகே அமைக்கப்ப ட்டி ருந்த டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு காரணமாக கரு ம்பு பயிரில் மின்சாரம் பா ய்ந்து தீப்பிடித்ததில் கரும்பு பயிர்கள் எரிந்து சேதமா னது. உடனடியாக இதுகுறி த்து சத்தியமங்கலம் தீயணை ப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரை ந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்ப டுத்தினர். இருந்தாலும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து சேதம டைந்தது. கரும்பு நன்கு வள ர்ந்து வெட்டும் தருவாயில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தனக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டு ம் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.