உள்ளூர் செய்திகள்

மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் சரிவு

Published On 2023-09-03 12:42 IST   |   Update On 2023-09-03 12:42:00 IST
  • மரவள்ளி கிழங்கு அதிகமாக வரத்தாகி வருகிறது.
  • மரவள்ளிக்கிழங்கு ரூ.13 ஆயிரமாக சரிந்து உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மொடக்குறிச்சி, தாளவாடி தாலுகாவில் அதிகப்படியாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

மாவுப்பூச்சி தாக்குதலால் சில காலமாக சாகுபடி குறைந்துள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் சில இடங்களில் பிற மாவட்டங்களில் இருந்தும் மரவள்ளி கிழங்கு அதிகமாக வரத்தாகி வருகிறது.

இந்நிலையில் ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ.12 ஆயிரத்துக்கு விற்கிறது.

உணவு சிப்ஸ்கான தரமான மரவள்ளிக்கிழங்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக சரிந்து உள்ளது. அதே சமயம் 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,500-க்கும், ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.4,500-க்கும் விற்பனை ஆகிறது.

அரசு சார்பில் மரவள்ளிக்கிழங்கு விலை குறையாமல் தடுக்க குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிப்பதுடன் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News