உள்ளூர் செய்திகள்

பவானி கூடுதுறையில் அலைமோதிய அய்யப்ப பக்தர்கள் கூட்டம்

Published On 2022-12-04 09:19 GMT   |   Update On 2022-12-04 09:19 GMT
  • இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.
  • இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி–மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முன்னோர் களுக்கு திதி கொடுத்து புனித நீராடி செல்வார்கள்.

ேமலும் அமாவாசை மற்றும் முக்கிய முகூர்த்த நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களும் அதிகளவில் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கியுள்ளனர். அவர்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்று வருகிறார்கள்.

இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Tags:    

Similar News