உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

Published On 2022-09-28 15:09 IST   |   Update On 2022-09-28 15:09:00 IST
  • ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.
  • இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

சென்னிமலை:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). கட்டிட தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று காலையில் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது காங்கேயம் ரோட்டில் அத்திக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் உபரி நீர் செல்லும் 4 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பழனிச்சாமி மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்து விட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News