உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 2 வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-11-08 07:43 GMT   |   Update On 2023-11-08 07:43 GMT
  • லாரி மற்றும் ஒரு மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
  • ஆவணங்க ளும் இல்லாமல் மண்ணை நிரப்பி கொண்டு வந்தது தெரிய வந்தது.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பரிசாபாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் பெரியபரசாபாளையம் அண்ணமார் கோவில் அருகே அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டி ருந்த ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தி னர்.

இதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்தது குரும்பபாளை யம் பகுதியை சேர்ந்த குருசாமி (32) என்பதும், மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்தது பவானிசாகர் இரங்காட்டூர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த வாகனங்க ளில் மண் எடுத்து செல்வ தற்கு எந்தவித அனுமதி மற்றும் ஆவணங்க ளும் இல்லாமல் டிப்பர் லாரி மற்றும் மற்றொரு வாகனத்தில் மண்ணை நிரப்பி கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 2 வாகனங்களையும் போலீசார் பிடித்து பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்து க்கு கொண்டு சென்றனர்.

மேலும் அரசு அனுமதி இன்றி மண் எடுத்து சென்றது குறித்து இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் ரபீ மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News