உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2023-10-09 14:33 IST   |   Update On 2023-10-09 14:33:00 IST
  • லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
  • போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்,

ஈரோடு சத்திரம் புதூர், டி.ஜி.பதூர் நால்ரோடு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செல்வம் (வயது 35), காளியப்பன் மகன் குமார் (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 3 ஆயிரத்து 200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News