உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Published On 2023-10-02 15:18 IST   |   Update On 2023-10-02 15:18:00 IST
  • புளியம்பட்டியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
  • காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பு.புளியம்பட்டி,

கோவை மாவட்டத்தை சேர்ந்த கோபால் (வயது 40) என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் கக்கரான் காரன் குட்டையில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு அவரது காரில் பவானி சாகர் வழியாக எஸ்.ஆர்.டி. நகர் அருகே சென்று கொண்டி ருந்தனர்.அப்போது புளியம்பட்டி தனியார் அலைன்மென்ட் கடையில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை யை சேர்ந்த மலைக்கொழுந்து (32) என்பவர் மது போதையில் அதிவேகமாக ஓட்டி வந்த கார் கோபால் ஓட்டிச் சென்ற கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்து கோபா லுக்கு கையில் லேசான காயமும் மற்றும் அவரது மகனுக்கு தலையில் காய ங்களும் ஏற்பட்டது. இதை யடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக சென்றனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கோபால் புளிய ம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தினால் பவானிசாகர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News