உள்ளூர் செய்திகள்

பஸ்-லாரி மோதி விபத்தில் 12 பேர் படுகாயம்

Published On 2022-07-21 14:56 IST   |   Update On 2022-07-21 14:56:00 IST
  • பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
  • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெருந்துறை:

திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இரவு பெருந்துறையை அடுத்துள்ள சரளை ஏரிகருப்பராயன் கோவில் அருகே சென்றது. அப்போது பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஈரோடு பகுதியை சேர்ந்த கீர்த்தி (26), அவரது தாயார் சரஸ்வதி (55), முகமது ஹுசைன் (49), சுல்தான் (49), முனீரியா (46), நசீமா பானு (18), முரளி (34), அன்புக்கரசி (50), சிவஞானம் (53), ரஹிக் (31), ரஷீதா பேகம் (20) மற்றும் பஸ் டிரைவர் பெருந்துறை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News