கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றதையும், சுவாமிக்கு அபிஷேகம் நடந்ததையும் படத்தில் காணலாம்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
- 29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.
ஏரல்:
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து இரவு 8 மணிக்கு அருணாசல சுவாமி கோவிலை வலம் வருதல் நடைபெறுகிறது. திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு மேல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.
29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், அதன்பின் ஏரல் நகர வீதி தரிசனம், ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு தாகசாந்தி, ஏரல் நகர் வீதிகளில் தரிசனம், 30-ந்தேதி 12-ம் திருவிழாவுடன் ஆடி அமாவாசை திருவிழா நிறைவுபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.