உள்ளூர் செய்திகள்

திருமணம் நிச்சயக்கப்பட்ட பிசியோதெரபி பெண் டாக்டர் தற்கொலை

Published On 2023-08-01 10:23 IST   |   Update On 2023-08-01 10:23:00 IST
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவரது மகள் அன்பரசி (வயது 27). பிசியோதெரபி டாக்டர். இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் திருச்சியில் வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஈரோடு வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இது தெரியாமல் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அன்பரசி தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என காலம் தாழ்த்தி வந்தார்.

பின்னர் மகள் வேறு வாலிபரை காதலிக்கும் தகவல் கிடைத்தது. இதனால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தினர். இதற்கிடையே காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அன்பரசி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

பின்னர் பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதை த்தொடர்ந்து பெற்றோர் அன்பரசிக்கு திருச்சியில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.

மேலும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் அன்பரசி மீண்டும் ஈரோடு வாலிபருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து தாய் தமிழரசி மகளை கண்டித்தார்.

இதில் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி க்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல அளிக்காமல் அன்பரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயக்கப்பட்ட பிசியோதெரபி பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News