உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

குடிநீர் கேட்டு காலி சாலை மறியல்

Published On 2023-08-21 15:40 IST   |   Update On 2023-08-21 15:40:00 IST
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
  • இன்று காலை காலி குடங்களுடன் அந்த வழியாக வந்த வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏரியூர்,

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சுஞ்சல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட திண்ணை பெல்லூர் பகுதியில்

350-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதிக்கு வாரம் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த குடிநீர் அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பல முறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் அந்த வழியாக வந்த வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதிக்கு இரண்டு நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தனர். இதனால் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம், பென்னாகரம்-நாகமரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News