கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
- மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் .ஏற்பட் டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.என .கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
- மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வர வேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி தொடங்கி வைத்தார்
கடலூர்:
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் ஏற்பட் டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வர வேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மாநில பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், ஏழுமலை, சுரேஷ், சின்னதுரை, சத்திய பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.