உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இலவச தையல் எந்திரங்கள் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2023-02-15 07:44 GMT   |   Update On 2023-02-15 07:44 GMT
  • பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மாற்றுத்திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அல்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச தையல் எந்திரங்களை பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் விவரம் வருமாறு :-

வருமானச் சான்று நகல் ரூ.72,000-த்திற்குள் இருத்தல் வேண்டும். (தாசில்தாரிட மிருந்து பெறப்பட வேண்டும்). பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்) .

விதவையாயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெறப்பட வேண்டும். சாதிச் சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும். கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும்.

மாற்றுத் திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும். தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் (இணைக்கப்பட்ட வேண்டும்).

குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் 2.மேற்கண்ட ஆவணங்க ளுடன் அவரவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக த்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்/ ஊர்நல அலுவலர் ஆகியோர்களை அணுகி, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு அறை எண்.303, 3-வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News