கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை யின் மூலம் 2022-23ஆம் ஆண்டிற்கு " டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது" ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2022ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கார் தமிழ்நாடு அரசு விருது 2023ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ள வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை இந்த மாதம் 30-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.