உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் யானை சவாரி தொடங்க வேண்டும்

Published On 2023-06-18 08:56 GMT   |   Update On 2023-06-18 08:56 GMT
  • இங்குள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் உள்ளன.
  • ெகாரோனா கால கட்டத்தில் யானைகளின் பாதுகாப்பு கருதி யானை சவாரி நிறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி,

ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ளது டாப்சிலிப்.

இங்குள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் உள்ளன. இந்த யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு பாகன்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, கும்கி ஆபரேஷன்கள், வனப்பகுதி மேம்பாடு, யானை சவாரி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்ப்பதையும், யானை சவாரியையும் விரும்புகின்றனர்.

சவாரிக்கு நன்கு பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டணம் செலுத்தி வனப் பகுதிக்குள் யானை மீது அமர்ந்து சவாரி செய்வது மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில், ெகாரோனா கால கட்டத்தில் யானைகளின் பாதுகாப்பு கருதி யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யானை சவாரி மீண்டும் தொடங்கப்படவில்லை.

இதனால், டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அமைந்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவு இல்லாததால் மீண்டும் யானை சவாரியை தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கொரோனா பாதுகாப்பு காரணங்களால் முதுமலையிலும், டாப்சிலிப்பிலும் அரசின் உத்தரவின்பேரில் யானை சவாரி நிறுத்தப்பட்டது. மீண்டும் யானை சவாரி தொடங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News