உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மின்வாரிய ஓய்வூதியர்கள் அரைநிர்வாண போராட்டம்

Published On 2022-10-11 07:23 GMT   |   Update On 2022-10-11 07:23 GMT
  • மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு திண்டுக்கல் கிளை சார்பில் அரைநிர்வாண போராட்டம் நடைபெற்றது.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு திண்டுக்கல் கிளை சார்பில் அரைநிர்வாண போராட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாக நீடித்திட வேண்டும்.

வாரிய செயல்முறை ஆணை எண்.2-ஐ ரத்து செய்ய வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட விதவை, விவாகரத்து மகள், ஊனமுற்றோர் குடும்ப ஓய்வூதியங்களை வழங்க வேண்டும். மருத்துவகாப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைைம வகித்தார். இணைச்செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் நல்லகண்ணு, லட்சுமணன், ஜெயசீலன், ராமசாமி, வெள்ளைச்சாமி, பாண்டி, ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News