உள்ளூர் செய்திகள்

கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.


தென்காசியில் வாக்காளர் பட்டியல் கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-11-27 08:58 GMT   |   Update On 2022-11-27 08:58 GMT
  • தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
  • சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் கூடுதல் ஆணையர் (நிலம்)மேற்பார்வையாளர் ஜெயந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் ஜெயந்தி கூறிய தாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி2023 ஜனவரி 1 -ந் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்கப்பட்டது. மேலும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடைய நல்லூர், தென்காசி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் ஆதார் இணைப்பு பணிகள் குறித்து பார்வை யிடப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்,வாக்காளர் பதிவு அலுவலர்களான கோட்டாட்சியர், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வருவாய் தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர்கள், தனி தாசில்தார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News