உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்விக்கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-11-08 08:56 GMT   |   Update On 2023-11-08 08:56 GMT
  • திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் கலந்துகொண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
  • மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு குழு தலைமையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்விக்கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வித்தியலட்சுமி இணைய வாயிலாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விக்கடன் பெறும் வசதி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உள்தர மதிப்பீடு குழு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் ப.வாமணன் கலந்து ெகாண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் சி.பா.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்விக்கடன் திட்ட செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திட்டம் குறித்து விளக்கி பேசினார். மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர். கல்வி கடன் திட்டத்தின் நோடல் அதிகாரி பேராசிரியை க.பார்வதி தேவி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிரில் அருண், திருச்செல்வன், செந்தில்குமார், அண்டனி முத்து பிரபு, ராஜபூபதி ஆகியோர் ெசய்திருந்தனர்.

Tags:    

Similar News