உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழாவையொட்டி கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கிய போது எடுத்தபடம்.

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா : கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

Published On 2023-05-12 08:59 GMT   |   Update On 2023-05-12 08:59 GMT
  • கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி:

அ.தி.மு.க. பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் அவரது தலைமையில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியையும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.கே. பெருமாள், சின்னப்பன், மோகன், கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, மகேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன். முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிச்சாமி, கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் நகர் மன்ற

துணைத்தலைவர் ராமர், மாவட்ட கவுன்சிலர் லெட்சுமணபெருமாள், மாணவரணி நிர்வாகி செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுதா, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசு, வள்ளியம்மாள், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பத்மா, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ் ஆரோக்கியராஜ், பழனிக்குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவும், ஆசி பெறவும் எடப்பாடிக்கு கிளம்பி சென்றனர்.

Tags:    

Similar News