மின்வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
- நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
- விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்து மின் வினியோகம் வழங்க உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நெல்லை மின் பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்க ளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சங்கரன் கோவில் கோட்ட செயற்பொறி யாளர் பால சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியா ளர்களும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தின் போது விவசாய மின் இணைப்பு சுயநிதி அடிப்படையில் விண் ணப்பித்த விண்ணப் பங்களை ஆய்வு செய்து உடனடியாக மின் வினியோகம் வழங்கவும், சங்கரன்கோவில் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரி களுக்கு மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவிட்டார்.