உள்ளூர் செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். 

புரட்டாசி மாதம் பிறந்ததால் கடலூர் துறைமுக மீன் அங்காடிகள் வெறிச்சோடியது

Published On 2023-09-24 07:37 GMT   |   Update On 2023-09-24 07:37 GMT
  • அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம்.
  • வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடலூர்:

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரத முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் பகுதியில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்று வந்தனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படக்கூடிய துறைமுகத்தில் பொதுமக்கள் மிக மிக குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்று சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மிகுந்த தொய்வுடன் காணப்பட்டனர். மேலும் வரத்து குறைவால் மீன்களின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. பொதுவாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் கிலோ 250 ரூபாய்க்கும், ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படும் கனவா வகை மீன் ரூ.150-க்கும், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News