உள்ளூர் செய்திகள்

மாரத்தான் ஓட்டத்தை டி.எஸ்.பி. கலையரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Published On 2022-08-24 09:41 GMT   |   Update On 2022-08-24 09:41 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
  • இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதை பரமத்தி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மாரத்தான் ஓட்டம் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி பள்ளி சாலை ,திருவள்ளூர் சாலை ,பழைய தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலையங்களை சேர்ந்த காவலர்கள், பரமத்தி வேலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்வேல் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News