உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கிராமப்புற பள்ளிகளில் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரிப்பு

Published On 2022-06-11 05:24 GMT   |   Update On 2022-06-11 05:24 GMT
  • உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.
  • திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.

உடுமலை,

உடுமலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பாட வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.அப்போது மேல்நிலைபள்ளி மாணவர்கள் சிலர் குடும்ப பொருளாதாரச்சூழல் காரணமாக கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிக்குச்சென்றனர்.இதையடுத்து அவ்வப்போது, நேரடி வகுப்புகள் துவங்கிய போதும் மாணவர்கள் சிலர், பல நாட்களாக பள்ளி செல்வதை தவிர்த்து வந்தனர்.

அவர்களைகட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டாலும், பயன் இல்லாமல் போனது.அவ்வகையில் பள்ளிகள் முழு அளவில் செயல்பட்டும் உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.

நடந்து முடிந்த 10, 11 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில், ஆப்சென்ட் பட்டியல் அதிகரித்தே காணப்பட்டது.அதில்பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:-

கிராமப்புற பள்ளிகளில் குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. காரணம் குழந்தை திருமணங்கள். திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.இதில் பெற்றோர்களே பள்ளி படிப்பை நிறுத்தி வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து வைக்கும் சூழல் உள்ளது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News