உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
திருப்பூர் மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- பவானியில் உள்ள 3 -வது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
- சனிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகரில் நாைள 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கும் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள 3 -வது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.ஆகவே, திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
சனிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.