உள்ளூர் செய்திகள்

டாக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2022-11-27 14:35 IST   |   Update On 2022-11-27 14:35:00 IST
  • நைனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ளார்.
  • பயிற்சி முடித்து வந்து பார்த்த போது நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

சேலம்:

சேலம் சிவாயநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி சரஸ்வதி (வயது 40). இவர் நெய்காரப்பட்டி அருகே உள்ள நைனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக உள்ளார். இவர் கடந்த 23-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் பயிற்சி முடித்து வந்து பார்த்த போது நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசில் சரஸ்வதி புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. மோட்டர் சைக்கிளை திருடிய 2 பேர் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர்கள் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அஸ்தம்பட்டி மத்திய சிறை பின்புறம் உள்ள உடையார் தெருவை சேர்ந்த திலீப்குமார் ( 44), ராணி (49) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News