உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்.

போடி அருகே கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-07-30 11:36 IST   |   Update On 2023-07-30 11:36:00 IST
  • பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.
  • பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி பகுதியில் அமைந்துள்ள வீர காளியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

போடி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.

பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற பந்தய மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இளஞ்சிட்டு வகை மாடுகளுக்கு ரூ.4000 முதல் பரிசாகவும் கோப்பை வழங்கப்பட்டது.

பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட நாட்டு மாடுகள் நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

Tags:    

Similar News