உள்ளூர் செய்திகள்

வேலூரில் ஜல்சக்தி திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி தொடங்கி வைத்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளார்.

ஏற்காடு மலை கிராமங்களில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம்

Published On 2022-10-17 09:33 GMT   |   Update On 2022-10-17 09:33 GMT
  • குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொடுப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக ஏற்காடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்து வந்தது.
  • முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொடுப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக ஏற்காடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்து வந்தது. தற்போது அனைத்து கிராமங்களிலும் அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் ஏற்காடு ஊராட்சியில் உள்ள கோவில் மேடு பகுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஏற்காடு ஊராட்சி மற்ற தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

அதே போல் ஏற்காடு வேலூர் ஊராட்சியில் உள்ள 2-வது வார்டில் வேலூர் ஊராட்சி கவுன்சிலர் சின்ன வெள்ளை, வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி மற்றும் ஏற்காடு தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் சின்னவெள்ளை ஆகியோர் குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர். 

Tags:    

Similar News