உள்ளூர் செய்திகள்
ராஜா எம்.எல்.ஏ. கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் பேசிய காட்சி.
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி
- புத்தாண்டை முன்னிட்டு ராஜா எம்.எல்.ஏ., கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகள் 2 பேருக்கு நிதி உதவி வழங்கினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் நகர தி.மு.க. மூத்த முன்னோடியும், தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நகர செயலாளருமான பரமபால்பாண்டியன், மற்றும் முன்னாள் வார்டு செயலாளர் ஆறுமுகம் ஆகியோரது வீடுகளுக்கு நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, நிதி உதவி அளித்தார்.
இதில் நகர செயலாளர் பிரகாஷ், நகரத் துணை செயலாளர் மாரியப்பன், மாணவரணி கார்த்தி, வார்டு செயலாளர்கள் வீரச்சாமி, சிவா மற்றும் வெங்கடேஷ், ஜான்சன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.