உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் கைதான அப்பானு மகேஷ்வரன்.

பைனான்சியர் கொலை வழக்கில் தி.மு.க பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-10-11 15:48 IST   |   Update On 2022-10-11 15:48:00 IST
  • இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
  • முக்கிய குற்றவாளியான திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வந்தார்.

இவருக்கும், ஒரு சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17.8.22 அன்று மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுத்த மணிவேலு என்ப வருக்கும்கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து.

இது சம்பந்தமாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டு ஒருவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தெற்குப்பொய்கைநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவில் அப்பானு மகேஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News