உள்ளூர் செய்திகள்

தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கிய போது எடுத்த படம்.

தருமபுரியில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-08-20 15:29 IST   |   Update On 2023-08-20 15:29:00 IST
  • உண்ணாவிரத போராட்டம் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தொடங்கியது.
  • மருத்துவ அணி மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேஷ் பாபு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தருமபுரி,

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற முறையில் செயல்படும் கவர்னரையும் கண்டித்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்டங்களில் இன்று காலை உண்ணாவிரத போராட்டங்கள் தொடங்கியது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர், கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆணைப்படியும், இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைபடியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி ஒருங்கிணைந்த கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் இன்று காலை தொடங்கியது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, நகர செயலாளர் நாட்டான் மாது, கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் என்.பெரியண்ணன், மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம். சந்தர், மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அணி மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேஷ் பாபு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர்கள் தர்ம செல்வன், சத்தியமூர்த்தி, மாநில நிர்வாகிகள் கீரை விஸ்வநாதன், சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன், மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ, மணி, உமா சங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம், கிருஷ்ண குமார், ராஜகுமாரி மற்றும் இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் என். பெருமாள் நன்றி கூறுகிறார்.

Tags:    

Similar News