சிவகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் பாக முகவர்களுக்கான குறிப்பேடு மற்றும் படிவங்களை யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் வழங்கிய காட்சி.
சிவகிரி- வாசுதேவநல்லூரில் தி.மு.க. கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- கூட்டத்தில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு பாக முகவர்களுக்கான குறிப்பேடு, படிவங்களை வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரி காந்தி ரோட்டில் உள்ள சண்முக விலாஸ் திருமண மண்டபத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனுமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் முருகன் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சிவகிரி விக்னேஷ் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ், அயலக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரமகுரு சிறப்பு உரையாற்றி பாக முகவர்களுக்கான குறிப்பேடு மற்றும் படிவங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியராஜ், பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், அருணா தேவி பாலசுப்பிரமணியன், தேவிபட்டணம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மாடசாமி, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.