மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
மானூரில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார்.
- மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூரில் நெல்லை மத்திய மாவட்டம் மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மேயர் சரவணன், துணை மேயா் கே.ஆர். ராஜூ, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், பாளை பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, புலிகண்ணன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நெல்லை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டியன், சுரேஷ், ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மணிகண்டன், சமுத்திரம் மற்றும் தொப்பிமைதீன், குழந்தை இயேசு, ஜெயச்சந்திரன், போத்திக்கண்ணு, ரவி, நயினாா், லெட்சுமணன், காளியப்பன், சுந்தா், மிக்கேல், ஜேக்கப், பால்ராஜ், தலைமை நிலைய பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா மற்றும் ஒன்றிய, கிளை செயலாளா்கள், பிரதிநிதி கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி செய்திருந்தார். முடிவில் பிரபாஅருள்மணி, ஜாஷகான் ஆகியோர் நன்றி கூறினர்.