உள்ளூர் செய்திகள்

வல்லம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வல்லம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-12 09:46 GMT   |   Update On 2023-10-12 09:46 GMT
  • வல்லம் பஸ்நிலையம் அருகில் ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
  • கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

வல்லம்:

காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்து வல்லம் பஸ்நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு திமுக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விவசாய சங்கத்தினர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காலை ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மற்றும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் தஞ்சை ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்த சாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வ ராணி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.ரா.அன்பழகன், ரெளலத்நி ஷா முகம்மது ஷாஃபி,மதிமுக ஒன்றிய செயலாளர் மாணிக்க வாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அபிமன்யூ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பஷீர் அகமது உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News