தஞ்சையில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
- அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
காய்கறி ,மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சையில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான மோகன் தலைமை தாங்கி பேசினார்.
தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், வடக்கு மாவட்ட அவை தலைவர் ராம்குமார், பால்வளத் தலைவர் ஆர். காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் முன்னாள் எம்.பி. பாரதி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், சி.வி. சேகர், ராம. ராமநாதன், ரத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன் , நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா. சேகர், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சநாதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை செந்தில், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் தட்சிணாமூர்த்தி , காந்திமதி நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி 51-வது வார்டு செயலாளர் மனோகர், பிரதிநிதி சண்முகசுந்தரம், தகவல் தொழில்நுட்பம் நடராஜன், நிர்வாகிகள் சூரிய நாராயணன், சோழபுரம் அறிவழகன், மலையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.