உள்ளூர் செய்திகள்

முதல் பரிசு பெற்ற அம்மன் பிளவர்ஸ் கபடி அணியினர்.

ஆலங்குளம் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி

Published On 2023-06-19 14:32 IST   |   Update On 2023-06-19 14:32:00 IST
  • கோவில் கொடை விழாவை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது.
  • 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.

தென்காசி:

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அம்மன் பிளவர்ஸ் கபடி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதனை ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாக குழுத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

60 கபடி அணியினர்

போட்டியில் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் குருவன்கோட்டை அம்மன் பிளவர்ஸ் கபடி அணியினர் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.

2-வது இடம் பிடித்த லட்சுமிபுரம் வி.ஆர்.என். அணிக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்க ப்பட்டது. 3-வது பரிசை கல்லூத்து வெண்புறா அணி பிடித்தது. அந்த அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.

தொடக்க விழா

முன்னதாக நடந்த தொடக்க விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், எழில்வாணன், மதுரை நாடார் சங்க தலைவர் வெங்கடேஷ் ராஜா, வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல் நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் குகன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளர் பால கிருஷ்ணன், தொழி லதிபர் ராமர், தெ ன்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக இணைச் செய லாளர்கள் அலெக்சாண்டர் தங்கம், ஹரிஹரசுதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை அம்மன் பிளவர்ஸ் முன்னாள், இந்நாள் கபடி அணியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News