மனித-விலங்கு மோதலை தடுக்க ஓவேலி வனக்கோட்டத்தில் 5 கும்கி யானைகளுடன் ரோந்து பணி-மாவட்ட வன அலுவலர் தகவல்
- அதிகப்படியான பலா மரங்கள், வாழை, பாக்கு தோட்டங்கள் உள்ள காரணத்தால் யானைகள் இந்த வாழ்விடத்தை நோக்கி வருகின்றன.
- காட்டு யானைகளின் நடமாட்டத்தை இரவும் பகலும் தொடா்ந்து களக் குழுவுடன் உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வனச் சரக அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்திலுள்ள ஓவேலி பகுதியானது கேரளத்தின் நிலம்பூா் வடக்கு வனக் கோட்டம், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கூடலூா் வனக் கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணையும் பகுதியாக உள்ளது.
இந்தப் பகுதியில் அதிகப்படியான பலா மரங்கள், வாழை, பாக்கு தோட்டங்கள் உள்ள காரணத்தால் யானைகள் இந்த வாழ்விடத்தை நோக்கி வருகின்றன. தற்போது யானைகள் நிலம்பூரில் இருந்து ஓவேலி வழியாக முதுமலை நோக்கி வருகின்றன.
யானைகள் நீண்ட தூரம் நகரும் விலங்காக இருப்பதால் மனித-யானை மோதல்கள் தவிா்க்க முடியாததாகிவிட்டது. மேலும் பழ வகைகள், தென்னை, ஏலக்காய் போன்ற யானைகளின் உணவு பயிர்களை பெரும்பா–லான மனிதா்கள் வசிக்கும் இடங்கள், தோட்டத் தொழிலா–ளா்களின் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.
இவை யானைகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளன. இதனை தவிா்க்கும்பொ–ருட்டு கூடலூா் வனக் கோட்டம், ஓவேலி வனச் சரகத்தில் மனித-விலங்குகளின் மோதல்க–ளை குறைப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டிலிருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வேட்டைத் தடுப்பு காவலா்கள், கூடுதல் களப்ப–ணியாளா்கள் சுமாா் 50 போ் பாதுகாப்புப் பணியிலும், 3 வாகனங்களுடன் அதிவிரைவு நடவடிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனா்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க ஆளில்லா விமானக் குழுக்களை அனுப்புதல், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவுதல், காட்டு யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழையாத வகையில் புகை மற்றும் நெருப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காட்டு யானைகளின் நடமாட்டத்தை இரவும் பகலும் தொடா்ந்து களக் குழுவுடன் உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வனச் சரக அலுவலா்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காட்டு யானைகள் தொடா்பான எந்த ஒரு பிரச்னைக்கும் தொடா்பு கொள்ள பொதுமக்களுக்கு அவசரகால தொடா்பு எண்கள் வழங்க–ப்பட்டு–ள்ளன. மேலும் யானைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் தினசரி அறிவிப்பு வழங்கி விழிப்புணா்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.