உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சுகாதாரத்துறையினரிடம் விசாரணை செய்தபோது எடுத்த படம்.

பரமத்தி வேலூர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-01-10 07:07 GMT   |   Update On 2023-01-10 07:07 GMT
  • நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3 1/2 வயது மகள் சிவதர்ஷினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
  • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி மாலை சிறுமி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3 1/2 வயது மகள் சிவதர்ஷினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால் கரூரில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி மாலை சிறுமி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும், சோகத்தை யும் ஏற்படுத்தியது. மேலும் அப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து நாமக்கல் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், நேற்று குழந்தை இறந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ குழுவிடம் விவரம் கேட்ட றிந்தார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது எனக் கூறி பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது அங்கு வந்த விவசாயிகள், நன்செய் இடையாறு மற்றும் பாலப்பட்டி பகுதியில் சரியான நேரத்தில் கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை எனவும், இதனால் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 15 வட்டாரங்களிலும் 318, பேரூராட்சி பகுதிகளில் 190, நகராட்சியில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை, மருந்து தெளிக்கப்பட்டு, புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், உதவி இயக்குனர்( ஊராட்சிகள்) கலை2யரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, பாலப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News