உள்ளூர் செய்திகள்

விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

குடியரசு தினவிழாவை யொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2023-01-27 08:26 GMT   |   Update On 2023-01-27 08:26 GMT
  • நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
  • மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை.

தஞ்சாவூர்:

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பொது மேலாளர் பாலமுருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசுகையில், ஜாதி, மதம், மொழி என்ற எந்த பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார்.

இதில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை நேற்று தொடங்கி வருகிற பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News