உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை 40 சதவீதம் பேருக்கு விநியோகம்

Published On 2023-01-19 09:09 GMT   |   Update On 2023-01-19 09:09 GMT
  • பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதியோர் உதவி தொகை பெறுவோருக்கும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.
  • ஆனால் போதிய அளவில் வேட்டி, சேலை உற்பத்தி இல்லாததால், இலவச வேட்டி, சேலை வரத்து குறைந்தே காணப்பட்டது.

நாமக்கல்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டி

கையையொட்டி நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதியோர் உதவி தொகை பெறுவோருக்கும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.

நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை விநியோகிக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் போதிய அளவில் வேட்டி, சேலை உற்பத்தி இல்லாததால், இலவச வேட்டி, சேலை வரத்து குறைந்தே காணப்பட்டது. இதனால் சிலருக்கு மட்டுமே பொங்கலை ஒட்டி வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் 5.4 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. பொங்கல் பரிசுத்தொகுப்பு 100 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இலவச வேட்டி, சேலையை பொருத்தமட்டில் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் 55 சதவீதம் சேலையும், 52 சதவீதம் வேட்டியும் குறைந்தபட்சம் 2.5 லட்சம் பேருக்கு (40 சதவீதம்) மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரியின் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் 20 சதவீதம் அளவில் வேட்டி, சேலை வழங்க வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்திற்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வேட்டி,சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News