உள்ளூர் செய்திகள்

கணவரை மீட்டு தர கோரி மனு அளிக்க வந்த சுயம்பு கனி மற்றும் குடும்பத்தினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்டு தரவேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு

Published On 2023-02-20 09:08 GMT   |   Update On 2023-02-20 09:08 GMT
  • சுடலைமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக சுயம்பு கனி தெரிவித்துள்ளார்.
  • பாதிரியார் தலைமையில் நடு பிள்ளையார்குளத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள் மனு அளித்தனர்.

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி சுயம்பு கனி ( வயது 38). இவர் இன்று தனது குடும்பத்தினருடன் வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.அதில் கூறி யிருப்பதாவது:-

வெளிநாட்டில் தவிப்பு

எனது கணவர் சுடலை மணி வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 1 வருடமாக அவரிடம் இருந்து எங்களுக்கு பணம் வரவில்லை. எனவே அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தீராத வயிற்று வலியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமலும், சம்பளம் கொடுக்காமலும் உள்ளனர். எனவே அங்குள்ள தூதரகம் மூலம் எனது கணவரை மீட்டு தரவேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பொதுமக்கள் மனு

ராமையன்பட்டி ஊராட்சி அனைத்து சமுதாய பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் ஊராட்சி மன்ற கட்டிடம் பொது இடத்தில் உள்ளது. அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏரா ளமானோர் பயனடைந்து வருகிறார்கள். அங்கு வைத்து சமத்துவ பொங்கல், கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அந்த மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் குழிகள் வெட்டி மரக்கன்றுகள் நட்டுள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யுள்ளனர்.

சாலை வசதி

மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளத்தை சேர்ந்த பாதிரியார் தலைமையில் கிறிஸ்துவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கிறிஸ்தவ சபை கூட்டம் நடத்த தடையில்லா சான்று கேட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை வழங்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மூலைக்கரைப்பட்டி துத்திக்குளம் 15-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில் எங்கள் பகுதி சுடுகாட்டுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Tags:    

Similar News