உள்ளூர் செய்திகள்

அரசு-தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு

Published On 2022-12-16 09:23 GMT   |   Update On 2022-12-16 09:23 GMT
  • சக டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவர்களை சமதானம் செய்து வைத்தனர்.
  • போக்கு–வரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் யார் முதலில் செல்வது என தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கும் இடையே போட்டி நிலவுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித்தடத்தில் பகல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்து பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை-– தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பஸ்கள், அரசு பஸ்களை முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அசுர வேகத்தில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டுக்–கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு அரசு பஸ் ஒன்று தயாராக இருந்த நேரத்தில், அதற்கு அடுத்த–தகாக தஞ்சாவூருக்கு செல்ல இருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணிகளை ஏற்றியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநருக்கும், தனியார் பஸ் ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சமதானம் செய்து வைத்தனர்.

இதனால் பஸ் நிலை–யத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்த னர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பஸ்சில் ஏறினால் விரைவாக சென்றுவிடலாம் என கருதி பயணிகள் ஏறுகின்றனர்.

ஆனால் சில தனியார் பஸ்கள் தங்கள் பஸ்சில் அதிக அளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற லாப நோக்கத்தில் செயல்பட்டு அரசு பஸ்சுக்கு பிறகு புறப்பட்டு அரசு பஸ்சை முந்தி சென்று அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர்.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News